Wednesday, August 31, 2005

இறைவனின் ஆசனம்
(இரண்டாம் பகுதி)

மனித உறுப்புகள் எனும் புற அவயங்கள் என்று எதை வைத்துக் கொண்டும் இறைவனை அறிய முடியாது. இறைவனின் குரலை மூஸா நபியவர்கள் கேட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் நாம் நினைக்கிற படி புற காதுகளால் அல்ல- இறைவனின் குரல் தொண்டையில் இருந்து வந்திருந்தால் அதை புற காதுகளை வைத்து கேட்டிருக்கலாம். ஆனால் ஒலியுமற்ற ஓசையுமற்ற குரலை கேட்க இந்த காதுகளுக்கு சக்தியில்லை என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எங்கள் ஹஜ்ரத் இறைஞானி மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள், 'ரசூலுல்லாவை பார்த்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்' என்றார்கள்.

ஓர் ஆதார அறிஞர்(?) குறுக்கிட்டார் 'அதெப்படி அபூஜஹ்லும் தான் ரசூலுல்லாவ பார்த்திருக்கிறான். அவன் நரகம் தானே செல்வான்' என்றார்.

எங்களது ஹஜ்ரத் அவர்கள், 'அபூஜஹ்ல் எங்கே ரசூலுல்லாவ பார்த்தான். அவன் முஹம்மது பின் அப்துல்லாவைல பார்த்தான்' என்றார்கள்.
பார்வைகளை மாற்ற வேண்டும். ஹதீஸ்களை மாற்ற கூடாது.

'இறைநேசர்கள் 'அஸ்ஹாபுல் கஹ்ப்' என்ற குகைத் தோழர்களை போன்றவர்கள்.அசைவிலும் விழிப்பிலும் அவர்கள் உறக்கத்தில் தான் உள்ளார்கள். அதாவது இறைவனே அவர்களை அசைக்கிறான். அவர்களே அறியாமல் அவர்கள் மூலமாக இறைவன் செயல்பட்டுக் கொன்டு இருக்கிறான்..' என்று மௌலானா ரூமி அவர்கள் மஸ்னவியில் எழுதுகிறார்கள்.
அது சரி ஞானிகளை ஞானிகளே காணுறுவர்.

பெருமானார் அவர்கள், 'இறைவனிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்' என்று சொன்னது இந்த நிலையைத் தான்.

சிந்திப்போம்

முஹம்மது இஸ்மாயில்

No comments: